சச்சினுக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

சச்சினுக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

செய்திகள் 22-Nov-2013 3:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் விலகினார் அல்லவா? சச்சினை இந்தியாவே புகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், சச்சின் பற்றி நல்ல திரைக்கதை அமைப்பில் படமெடுத்தால் அதில் நடிக்க தயார் என்று பாலிவுட் ஸ்டார் ஆமீர்கான் விருப்பம் தெரிவித்திருந்தார் அல்லவா? ஆமீர்கானை தொடர்ந்து மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் சச்சினை புகழந்திருப்பதோடு ரசிகர்களுக்கு முன் சச்சின் நடத்திய பேச்சின் உள்ளடகத்தை குறித்தும் தனது ‘மைக்ரோ ப்ளாகி’ல் பாராட்டி எழுதியுள்ளார். அதில், ‘‘சச்சின் ஒரு வெளிச்சம்! அவர் சொன்ன கருத்துக்களை எல்லா குழந்தைகளும் பின்பற்ற வேண்டும். அவரது பேச்சில் அடங்கிய கருத்துக்களை பள்ளிகளில் பாடமாக கூட நடத்தலாம். லட்சியத்தை அடைய குறுக்கு வழிகளை பின் பற்றக் கூடாது என்று சச்சினுக்கு அறிவுரை கூறிய அவரது தந்தையின் கருத்துக்களை எல்லா குழுந்தைகளும் சச்சினை போன்று பின்பற்ற வேண்டும். அப்படி எல்லோரும் செயல்படுமானால் நல்ல ஒரு சமூகம் அமையும்’’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார் மோகன்லால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;