ஒரே நேரத்தில் 3 படங்கள்!

ஒரே நேரத்தில் 3 படங்கள்!

செய்திகள் 22-Nov-2013 12:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஷால் நடிப்பில் ‘பட்டத்து யானை’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் அடுத்து மூன்று படங்களை தயாரிக்கிறார். அதில் ஒரு படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கிய சாய்ரமணி இயக்கும் இந்தப் படத்தின் கதாநாயகி யார் என்று இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இன்னொரு படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, படத்திற்கு ‘ஈட்டி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப் படத்தை வெற்றி மாறனின் உதவியாளர் ரவி அரசு இயக்குகிறார். இந்தப் படத்திற்கும் டி.இமானே இசை அமைக்கிறார். மூன்றாவதாக கண்ணன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான ஹீரோயின் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. ‘பட்டத்து யானை’ படத்திற்கு முன் ‘சிந்துசமவெளி’, ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘நாடோடிகள்’ போன்ற பல படங்களை தயாரித்து கோலிவுட்டில் பேசப்பட்டவர் மைக்கேல் ராயப்பன்! இப்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிப்பது அவரை மேலும் பேசப்பட வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;