‘துப்பாக்கி’யை தொடர்ந்து நேர் எதிர்!

‘துப்பாக்கி’யை தொடர்ந்து நேர் எதிர்!

செய்திகள் 22-Nov-2013 12:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’யை தொடர்ந்து நேர் எதிர்! ‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ‘கலைப்புலி’ எஸ் தாணு தயாரிக்கும் படம் ‘அரிமா நம்பி’. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்க, ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். ‘டிரம்ஸ்’ சிவமணி முதன் முதலாக இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்துடன் ‘கலைப்புலி’ எஸ். தாணு, ’நேர் எதிர்’ என்ற ஒரு படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை எம்.ஜெயப்ரதீப் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் கேயாரின் உதவியாளர்! நேர் எதிரான குணாதிசயங்களை கொண்ட இரண்டு கேரக்டர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பார்த்தி, ரிச்சர்ட் ஆகியோர் நடித்துள்ளனர். ’அரிமா நம்பி’ படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ‘நேர் எதிர்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் கலைப்புலி தாணு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;