இன்று முதல் டீல்!

இன்று முதல் டீல்!

செய்திகள் 22-Nov-2013 11:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தடையற தாக்க’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘டீல்’. இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் நடிக்க, படத்தை சிவ ஞானம் இயக்கியிருக்கிறார். கடந்த ஒரு சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. தமன் இசை அமைக்கும் இப்படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்குகிறது. ஒரு பெரிய வெற்றிக்காக கடுமையாக உழைத்து வரும் அருண் விஜய்க்கு ’டீல்’ படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என்கிறார்கள் படக்குழுவினர்! விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்தை ’ஃபெதர் டச்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போங்கு மோஷன் போஸ்டர்


;