விஜய் ஆன்டனியின் இஸ்லாம் சென்டிமென்ட்!

விஜய் ஆன்டனியின் இஸ்லாம் சென்டிமென்ட்!

செய்திகள் 21-Nov-2013 4:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நான்’ படத்திற்குப் பிறகு இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்து வரும் படம், ‘சலீம்’. என்.வி.நிர்மல்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக அக்‌ஷா பர்தசானி நடிக்க, விஜய் ஆன்டனியே இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் முதல் டீஸரை நாளை 7- மணி 8- நிமிடம், 6-ஆவது நொடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்! அது என்ன 7 மணி, 8 நிமிடம், 6-ஆவது நொடி என்கிறீர்களா? படத்திற்கு ‘சலீம்’ என்று பெயர் வைத்திருப்பதால் இஸ்லாத்தின் புனித எண் ஆன ‘786’ அடிப்படையாக வைத்து அந்த நேரத்தில் டீஸரை வெளியிட்டு அசத்த இருக்கிறார்கள்! ஐடியா நல்லாதானே இருக்கு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;