ரஜினியின் டபுள் ட்ரீட்!

ரஜினியின் டபுள் ட்ரீட்!

செய்திகள் 21-Nov-2013 3:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

டிசம்பர் 12-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள்! அன்றைய தினம் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அஸ்வின் இயக்கி, தயாரித்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. நீண்ட நாட்களாக ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த கோலிவுட்டையே ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா முடிந்ததும், படத்தை பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் பிறந்த நாள், ‘கோச்சடையான்’ படப் பாடல்கள் வெளியீடு என கொண்டாட இருக்கும் ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட் ஆக ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த, ’16 வயதினிலே’ படமும் அன்றைய தினம் ரிலீசாக இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ’16 வயதினிலே’ படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சமீபத்தில் தான் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவெல்லாம் நடந்தது! ஆக, ரஜினியின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;