நாளை பண்ணையார்! ஞாயிற்றுக் கிழமை யானை!

நாளை பண்ணையார்! ஞாயிற்றுக் கிழமை யானை!

செய்திகள் 21-Nov-2013 3:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நாளை பண்ணையார்! ஞாயிற்றுக் கிழமை யானை! சென்னையில் அடுத்தடுத்து இரண்டு படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. அதில் முதலாவதாக ‘மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னை சத்யம் தியேட்டரில் நாளை (22-11-13) காலையில் நடக்கவிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்திருக்க, அருண்குமார் இயக்கியிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக் கிழமை (24-11-13) அன்று இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதன் முதலாக தயாரித்திருக்கும் ‘மதயானை கூட்டம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருக்க, விக்ரம் குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கதிர், ஓவியா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு முடியும் தறுவாயில் இருப்பதால் வரும் நாட்களில் பல படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவையும், அந்தப் படங்களின் ரிலீஸையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பு தரப்பினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;