மகாபாரதத்தில் அமிதாப் – வித்யா பாலன்!

மகாபாரதத்தில் அமிதாப் – வித்யா பாலன்!

செய்திகள் 21-Nov-2013 2:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எவ்வளவு எடுத்தாலும் தீராத அட்சய பாத்திரம் மாதிரிதான் மகாபாரத கதைகள்! மகாபாரதத்தை தழுவி பல மொழிகளிலாக எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் பெரும்பாலும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மணிரத்னம் இயக்கிய, ‘தளபதி’ திரைப்படம் கூட மகாபாரத கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் மகாபாரத கதையை வைத்து பிரம்மாண்ட அனிமேஷன் 3டி ஹிந்திப் படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அனிமேஷன் கேரக்டர்களாக தோன்றவிருக்கும் நடிகர் - நடிகைகளை பற்றிச் சொன்னாலே, இந்த படம் எவ்வளவு பிரம்மண்டமாக உருவாகி வருகிறது என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.அனைவராலும் ‘பிக் பி’ என்று அழைக்கப்படும் அமிதாப்பசன் பீஷ்மராக தோன்ற, அர்ஜுனன் ஆக அஜய் தேவ்கன் வருகிறார். பீமனாக மனோஜ் பாஜ்பாயும், துர்யோதனனாக சன்னி தியோலும், பாஞ்சாலியாக வித்யா பாலனும் அனிமேஷன் பாத்திரங்களாக கலக்க இருக்கிறார்கள். அனுபம் கேர், சகுனியாக தோன்ற ஜாக்கி ஷெராஃப், ஓம்புரி, அதுல் குல்கர்னி முதலானோரும் இந்த இதிகாச கதையில் அனிமேஷன் கேரக்டர்களாக வலம் வர இருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணராக யார் நடிக்கிறார் என்பதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். அந்தந்த கேரக்டர்களுக்கு சம்பந்தப்பட்ட கலைஞர்களே குரல் கொடுக்க இருப்பது இந்தப் படத்தின் தனிச் சிறப்பு!

இந்த அனிமேஷன் 3டி திரைப்படத்தை ஜெயந்திலால் காடா தயாரிக்க, அமான் கான் இயக்கி வருகிறார். இதற்கு முன் மகாபாரத கதைகளை வைத்து நிறைய அனிமேஷன் திரைப்படங்கள் வந்திருக்கிறது என்றாலும், அந்தப் படைப்புகளில் இருந்து இந்தப் படைப்பு மாறுபட்ட வகையில், இதுவரை யாரும் தயாரித்திராத வகையில் அமையும்’’ என்கிறது தயாரிப்பு தரப்பினர். பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்கள் இணையும் இந்த பிரம்மாண்ட படைப்பின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எக்கச்சக்கமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;