மம்முட்டி அண்ணன், மோகன்லால் மாப்பிள்ளை!

மம்முட்டி  அண்ணன், மோகன்லால் மாப்பிள்ளை!

செய்திகள் 21-Nov-2013 11:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல மலையாள மனோரமா பத்திரிக்கை குழுமத்தின் சார்பாக இந்திய சினிமா நூற்றாண்டு விழா சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பிரபுவும், மலையாள நடிகர் சங்கத் தலைவரான இன்னசென்டும் சேர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மெகாஸ்டார் மம்முட்டி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். அதன் பிறகு பேசிய பிரபு,

“ நான் ஒரு சில மலையாள படங்களில் நடித்திருப்பதோடு, மலையாளத்தில் வெற்றிபெற்ற நிறைய படங்களின் தமிழ் ரீ-மேக்கில் நடித்திருக்கிறேன். மலையாள சினிமா ரசிகர்கள் என்னை ஒரு வேறு மொழி கலைஞன் என்று பாராமல் என்னை நேசித்து, எனக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். அந்த நட்பும், ஆதரவும் தான் என்னை இந்த விழாவுக்கு அழைத்து வந்திருக்கிறது போலும்! மலையாள சினிமாவை பொறுத்த வரையில் மம்முட்டி என் அண்ணன் என்றால், மோகன்லால் எனது மாப்பிள்ளை! இவர்களது குடும்பத்திற்கும் என் குடும்பத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது. என் தந்தை நடித்த 25 படங்களை தயாரித்தவர் மோகன்லாலின் மாமனார் பாலாஜி தான்! அவரது மகள் சுசித்ரா என் சிறுவயது தோழி! அவரைதான் மோகன்லால் திருமணம் செய்திருக்கிறார்.

அது போல மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மானும் எனது மகனும் ஒரே பள்ளியில் தான் படித்திருக்கிறார்கள். இப்போது இரண்டு பேரும் நடிகர்களாகி பல படங்களில் நடித்து வருகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. இந்த விழாவுக்கு என்னை அழைத்து பெருமைப்படுத்தியதற்கு நான் ரொம்பவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்’’ என்றார் .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;