ஒரே ஃப்ரேம், ஆயிரம் கதைகள்!

ஒரே ஃப்ரேம், ஆயிரம் கதைகள்!

செய்திகள் 21-Nov-2013 10:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆட்டோகிராஃப்’, ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கி, ‘திருப்பதி பிரதர்ஸ் & ரஃப் நோட்’ இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கோலி சோடா’. இப்படத்தைப் பற்றி விஜய்மில்டன் கூறும்போது,

‘‘ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையாக நூற்றுகணக்கான இளைஞர்கள் தூங்கிக்கிட்டு இருந்தாங்க. அந்த ஃப்ரேம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லுச்சு. அவங்க யாரு, என்னன்னு விசாரிச்சப்போ கிடைச்ச லைன் தான் ‘கோலி சோடா’.

அவங்களுக்கு இந்த மார்க்கெட்டை தாண்டி வேறு எதுவும் தெரியாது. அவங்களுக்குன்னு எந்த அடையாளமும் கிடையாது. வயசு ஆயிருச்சுனா வாழ்க்கை அவ்வளவுதான். வயசானாலும் மார்க்கெட்டை விட்டு போக மாட்டாங்க. கஞ்சா விக்கிறது, டீக்கடை போடுறதுன்னு அங்கேதான் சுத்தி வருவாங்க. இப்படிப்பட்ட நாலு பசங்க, கடை முதலாளி இப்படி ரெண்டு வெவ்வேற எண்ணங்களோட இருக்கிறவங்களோட மோதல் தான் படம். இந்தப் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் - டிரைலர்


;