விஷ்ணு – ஷாருக் திடீர் சந்திப்பு!

விஷ்ணு – ஷாருக் திடீர் சந்திப்பு!

செய்திகள் 20-Nov-2013 4:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆரம்பம்’ படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் - பாலிவுட்டின் ஷாருக்கான் இருவரும் சமீபத்தில் துபாயில் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப் போகிறார் என்று யாரும் தீர்மானித்து விடவேண்டாம்! இது மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்புதானாம்! 2001-ல் வெளியான ‘அசோகா’ திரைப்படத்தில் சந்தோஷ் சிவனின் அசோசியேட்டாக பணிபுரிந்தவர் விஷ்ணுவர்தன். ‘அசோகா’ படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதோடு, இந்தப் படத்தில் அஜித்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ‘அசோகா’ படத்தில் பணியாற்றும்போது ஷாருக்கான் - விஷ்ணுவர்தனுக்கிடையில் ஏற்பட்ட நட்பே இப்போது மீண்டும் இருவரையும் சந்திக்க வைத்துள்ளது. விஷ்ணுவர்தன் ஷாருக்கை சந்தித்ததும், “உங்களோட ‘ஆரம்பம்’ படத்தின் டிரெய்லரை பார்த்தேன், சூப்பரா இருந்தது’’ என்று ஷாருக் பாராட்டினாராம். இதை இயக்குனர் விஷ்ணுவர்தனே தனது மைக்ரோ ப்ளாகில் தெரிவித்திருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;