கோவாவில் 44-வது உலக திரைப்பட விழா!

கோவாவில் 44-வது உலக திரைப்பட விழா!

செய்திகள் 20-Nov-2013 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்று மாலை, கோவாவில் 44-வது உலக திரைப்பட விழா கோலாகலமான முறையில் துவங்கவிருக்கிறது. இன்று முதல் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த விழாவின் துவக்க விழா மத்திய அமைச்சர் மனிஷ் திவாரியின் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகை சூசன் சராண்டர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, நடிகர் கமல்ஹாசன், பிரபல பாலிவுட் பிரபலங்களான ரேகா, ஆஷா போஸ்லே, வஹீதா ரஹ்மான், இரான் நாட்டை சேர்ந்த பிரபல இயக்குனர் மஜித் மஜிதி மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

10 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 326 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன! இதில் 15 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்பதும், திரையிடப்படும் படங்களில் 80 சதவிகித படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பிரபல இயக்குனர் ஜிரி மென்செல்லுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க இருப்பதோடு அவர் சமீபத்தில் இயக்கிய, ‘THE DON JUANS’ என்ற திரைப்படம் விழாவின் முதல் படமாக திரையிடப்படவிருக்கிறது. இந்தியன் பனோரமா பிரிவில் முதல் படமாக ‘கன்னியகா டாக்கீஸ்’ என்ற மலையாள திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது.

பத்து நாட்கள் நடக்கவிருக்கும் இந்த விழாவில் 76 நாடுகளை சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 திரைப்பட பிரமுகர்கள், 300 பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசால் வருடம்தோறும் நடத்தப்படும் இந்த சரவதேச திரைப்பட விழா, முதலில் ஒவ்வொரு வருடமும் மும்பை, கொல்கத்தா, புது தில்லி, சென்னை என இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடந்து வந்தது. அதன் பிறகு இந்த விழாவை ஒரே இடத்தில் நடத்துவது என்று மத்திய அரசால் முடிவு செய்து இப்போது கடந்த 10 வருடங்களாக கோவாவில் நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தூங்காவனம் - மேக்கிங் வீடியோ


;