அஜித் படத்தில் கார்த்தியின் வில்லன்!

அஜித் படத்தில் கார்த்தியின் வில்லன்!

செய்திகள் 20-Nov-2013 11:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அஜித்தின் ‘வீரம்’ படம் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. அண்ணன் - தம்பிகளுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை மையமாக வைத்து குடும்பப் படமாக தயாராகி வரும் இப்படத்தில் அஜித், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, முனிஷ், மனோசித்ரா, சூஸா குமார், நாசர் உட்பட பலர் நடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்ததிதான்.

ஆனால், படத்தில் வில்லன்கள் யார் யார்? என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமலேயே இருந்தது. தற்போது, இப்படத்தில் நடிக்கும் கன்னட ஆக்டர் அவினாஷுக்கு ‘வில்லன்’ பாத்திரம்தான் என்ற செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கெனவே கார்த்தியின் ‘சிறுத்தை’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அவினாஷ், ‘வீரம்’ படத்தில் தனக்கு அஜித்துடன் பல காட்சிகள் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதோடு டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் அஜித், நாசருடன் சில காட்சிகளில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;