ஸ்ருதியை தாக்கிய மர்ம நபர்!

ஸ்ருதியை தாக்கிய மர்ம நபர்!

செய்திகள் 20-Nov-2013 11:36 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருவதால், பெரும்பாலும் அவர் மும்பையிலேயே வசித்து வருகிறார். ஸ்ருதியின் வீடு முமபை, பாந்த்ரா பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6-வது மாடியில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று ஸ்ருதி ஹாசன் தனது வீட்டில் இருக்கும்போது ஒரு மர்ம நபர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியுள்ளார்.

யார் என்று பார்ப்பதற்காக ஸ்ருதி ஹாசன் வீட்டின் கதவை திறந்தபோது அந்த மர்ம நபர், ”நீங்கள் என்னிடம் ஏன் பேச மறுக்கிறீர்கள்?’’ என்று கேட்டபடி ஸ்ருதி ஹாசனை தாக்கிவிட்டு வீட்டுக்குள் நுழைய முயன்றிருக்கிறார். உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி ஹாசன் அந்த மர்ம நபரை வீட்டுக்குள் நுழைய விடாமல் விரட்டியுள்ளார். இந்த களேபரத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு லேசாக காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பவம் குறித்து ஸ்ருதி ஹாசன் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி - மோஷன் போஸ்டர்


;