மீரா ஜாஸ்மின் ஜாதகத்தில் தோஷம்!

மீரா ஜாஸ்மின் ஜாதகத்தில் தோஷம்!

செய்திகள் 20-Nov-2013 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்த நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளார். தமிழில் சிம்பு நடிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வரும் மீரா ஜாஸ்மின், மலையாளத்தில், ‘ஒன்னும் மிண்டாதே’, மழநீர் துள்ளிகள்’ என இரண்டு படங்களில் நடித்து வருவதோடு, ‘இதினுமப்புறம்’ என்ற ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் ருக்மிணி எனும் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் மீரா ஜாஸ்மின். 70-களில் நடப்பது மாதிரியான இந்த கதையில் ஆச்சாரமான நாயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியாக மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார் மீரா! ருக்மிணியின் ஜாதகத்தில் பல தோஷங்கள் இருக்கிறது. அந்த தோஷங்களுக்கு பரிகாரம் செய்து அவளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் அவரது பெற்றோர்! இந்நிலையில் ருக்மிணி கீழ் ஜாதி இளைஞன் ஒருவனிடத்தில் தனது மனதை பறிகொடுக்கிறார்.

இதன் பிறகு ருக்மிணிக்கும், அவரது பெற்றோருக்கும் இடையில் நடைபெறும் சம்பவங்களும், அதன் முடிவும்தான் ‘இதினுமப்புறம்’ படத்தின் கதைக் களம். இந்தப் படத்தை மனோஜ் ஆலுங்கல் இயக்குகிறார். மீராவின் நடிப்பு திறமைக்கு, சரியான தீனி போடும் கேரக்டராம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவி - ஆடியோ பாடல்கள்


;