‘தகராறு’ நாயகனுடன்.... ‘ஃபை ஃபை’ பாடகி!

‘தகராறு’ நாயகனுடன்.... ‘ஃபை ஃபை’ பாடகி!

செய்திகள் 20-Nov-2013 11:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘பாண்டிய நாடு’ படத்தில் ‘ஃபை ஃபை... கலாச்சி ஃபை...’ பாடலைப் பாடிய ‘பீட்சா’ நாயகி ரம்யா நம்பீசன், ‘தகராறு’ படத்தின் நாயகன் அருள்நிதியுடன் ஜோடி சேருகிறார்.

அறிமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா இயக்கவிருக்கும் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்தில்தான் இந்த ஜோடி கூட்டணி போட இருக்கிறார்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற நீளமான பெயர்களை வைத்து படமெடுத்த ‘லியோவிஷன்’ பட நிறுனம்தான் இந்த நீளமான பெயரைக் கொண்ட படத்தையும் தயாரிக்கிறது.

காமெடி + மெசேஜ் என்ற வெற்றி ஃபார்முலாவைக் கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பொதுவாக எம்மனசு தங்கம் - டிரைலர்


;