இன்னைக்கு யாருக்கெல்லாம் ‘ஃபர்த்டே’ தெரியுமா?

இன்னைக்கு யாருக்கெல்லாம் ‘ஃபர்த்டே’ தெரியுமா?

செய்திகள் 20-Nov-2013 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்’ என கடைசிவரை உறுதியாக இருந்து மலையாளத்திலும், தமிழிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகை ஷாலினி அஜித்தின் பிறந்த நாள் இன்று. ‘ஆரம்பம்’ படத்தின் வெற்றியை தடபுடலாக கொண்டாடி வரும் ‘தல’யின் ரசிகர்கள், ஷாலினியின் பிறந்தநாளையும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி - ஹன்சிகா நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் ஒளிப்பதிவாளர் சக்தி சரணவன், அப்படத்தில் நடித்திருக்கும் சுப்பு பஞ்சு ஆகியோருக்கும் இன்றுதான் பிறந்தாள்.

பாலிவுட் பிரபலங்களான ஜிதேந்திரா - ஷோபா கபூர் ஆகியோரின் மகனும், பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் சகோதரருமான நடிகர் துஷார் கபூருக்கும் இன்றுதான் பிறந்தநாள்.

‘கான்டாக்ட்’, ‘பேனிக் ரூம்’, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘எலிஸியம்’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த நாயகி ஜோடி ஃபாஸ்டர் பிறந்தநாளும் இன்றுதான்.

இன்று (20-11-13) பிறந்தநாள் கொண்டாடும் இந்த சினிமா பிரபலங்களுக்கு ‘டாப் 10 சினிமா’வின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;