வித்தியாசமான புரமோஷனில் ‘இரண்டாம் உலகம்’!

வித்தியாசமான புரமோஷனில் ‘இரண்டாம் உலகம்’!

செய்திகள் 20-Nov-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் செல்வராகவன் படங்கள் என்றாலே எப்போதும் ஏதாவது ஒரு தனித்துவத்துடன் வரும். அந்த வகையில், வரும் 22ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘இரண்டாம் உலகம்’ படம் கதையம்சம், கிராபிக்ஸ் என தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் டிரைலர், போஸ்டர்ஸ் என எல்லாவற்றையுமே வித்தியாசமாக தந்து கொண்டிருக்கும் ‘இரண்டாம் உலகம்’ படக்குழு, தற்போது அதன் ஹோர்டிங் ஒன்றையும் வித்தியாமாக வைத்து அனைவரின் புருவத்தையும் உயர வைத்திருக்கிறார்கள்.

சென்னை வடபழனி ‘ராஹத் பிளாசா’விற்கு அருகே வைக்கப்பட்டுள்ள இந்த ஹோர்டிங்கில் ’3டி லேயர்டு’ என்ற வித்தியாசமாச முயற்சியை கையாண்டிருக்கிறார்கள். அதாவது, ஹோர்டிங்கின் பேக்ரவுண்ட் ஒரு லேயர், ‘இரண்டாம் உலகம்’ டைட்டிலுக்கு ஒரு லேயர், ஆர்யா, அனுஷ்கா படங்களுக்கு தனித் தனி லேயர் என பல ‘லேயர்’களைக் கொண்டு இந்த ஹோர்டிங்கை உருவாக்கியிருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு ‘3டி’ படத்தைப் பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தரும் இந்த ‘ஹோர்டிங்’ முயற்சி அனேகமாக தமிழ்சினிமாவில் முதல்முறையாக இருக்கலாம். இந்த ‘ஹோர்டிங்’கை வெளிப்புற விளம்பரப் பலகைகள் அமைக்கும் நிறுவனமான ‘பிக் பிரிண்ட்’ செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;