வடிவேல் டயலாக்கில் கௌதம் கார்த்திக்!

வடிவேல் டயலாக்கில் கௌதம் கார்த்திக்!

செய்திகள் 20-Nov-2013 10:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கடல்’ படத்தின் மூலம் அறிமுகமான கௌதம் கார்த்திக் தற்போது ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து ‘போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகனாகிறார் கௌதம். ‘நானும் ரவுடிதான்’ என்ற வடிவேலின் காமெடி டயலாக்கையே இப்படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

முதலில் இப்படத்தில் நாயகனாக நடிக்க அனிருத்தை அணுகியிருக்கிறார்கள். ஆனால், வரிசையாக பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்துள்ளதால், தற்போதைக்கு இசையில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகச் சொல்லி அனிருத் இப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால், ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு இசை அனிருத்தான்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2014ல் துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;