வேக வேகமாக முன்னேறும் ஜெய்!

வேக வேகமாக முன்னேறும் ஜெய்!

செய்திகள் 20-Nov-2013 10:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அனைவரையும் கவர்ந்த ஜெய்க்கு, அதன் பின்னர் 2 வருடங்களுக்கு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது, ‘ராஜா ராணி’ படத்தின் வெற்றி மூலம் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டார் ஜெய். வரும் 29ஆம் தேதி அவருடைய நடிப்பில் ‘நவீன சரஸ்வதி சபதம்’ ரிலீஸாகவுள்ளது. தவிர, ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’, ‘வேட்டை மன்னன்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘வடகறி’ ஆகிய படங்கள் முடியும் தருவாயில் உள்ளன. இதுதவிர அவர் நடிப்பில் நீண்டநாள் வெளியாகாமல் இருக்கும் ‘அர்ஜுனன் காதலி’ படமும் விரைவில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ‘உதயம்’ படத்தை இயக்கிய மணிமாறன் அடுத்து இயக்கவிருக்கும் ‘பொடியன்’ படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார் ஜெய். ‘‘கிராமப்புறங்களில் சிறுவயது பையன்களை ‘பொடியன்’ என்று அழைப்பார்கள். ஆனால், இந்தப்படம் வந்தால் அதற்கான அர்த்தமே மாறிவிடும்’’ என்கிறார் வெற்றிமாறனின் உதவி இயக்குரான மணிமாறன். நாயகி உட்பட மற்ற நடிக, நடிகையர், டெக்னீஷன்யன்கள் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;