உறுதியானது சிம்பு - நயன்தாரா கூட்டணி!

உறுதியானது சிம்பு - நயன்தாரா கூட்டணி!

செய்திகள் 19-Nov-2013 5:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட்டில் இப்போது பரபரத்துக் கொண்டிருக்கும் செய்தி சிம்பு – நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது! சிம்புவை வைத்து பாண்டிராஜ் இயக்கி வரும் படத்திற்கான ஹீரோயின் முடிவாகாமல் இருந்தது. இந்நிலையில், “சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அழகான தேவதை மாதிரியான ஒருவரை தேடி வருகிறேன்’’ என்று பாண்டிராஜ் கூறி வந்தார்! நயன்தாராவை மனதில் வைத்து தான் பாண்டிராஜ் இப்படி கூறியிருக்கிறார் என்று கோலிவுட்டில் பேசப்பட, நயன்தாராவுக்கும் இந்தச் செய்தி போய் சேர்ந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நயன்தாரா சிம்புவுடன் மீண்டும் நடிக்க ரெடி என்று கிரீன் சிக்னல் காட்டி விட, பாண்டிராஜ் உடனே நயன்தாராவை சந்தித்துப் பேசி, இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதை உறுதி செய்துள்ளார். ‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு சிம்பு – நயன்தாரா இருவருக்குள் காதல் ஏற்பட்டு, அதன் பிறகு சில பிரச்சனைகளால் அந்த காதல் முறிந்து இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தனர்! இப்போது பாண்டிராஜ் இயக்கும் படம் மூலம் மீண்டும் இருவரும் இணைகிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;