நஸ்ரியாவின் புதிய சாதனை!

நஸ்ரியாவின் புதிய சாதனை!

செய்திகள் 19-Nov-2013 3:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், மலையாள சினிமா ரசிகர்களின் ‘ட்ரீம் கேர்ள்’ நஸ்ரியா நசீமின் ஃபேஸ்புக் லைக்ஸ் எண்ணிக்கை 20 லடசத்தைத் தாண்டி, இன்னமும் ஜெட் வேகத்தில் போய்கொண்டிருக்கிறது! தமிழ், மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘நேரம்’ மற்றும் ‘ராஜாராணி’ படங்களின் வெற்றியை தொடர்ந்து ரொம்பவும் பிரபலமானார் நஸ்ரியா.

இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான ‘லைக்ஸு’கள் பெற்று மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோரையே சமீபத்தில் பின்னுக்கு தள்ளினார் நஸ்ரியா! இவர் தனுஷுடன் ஜோடியாக நடித்த, ‘நய்யாண்டி’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், இந்தப் படம் சம்பந்தமாக எழுந்த பிரச்சனையால் அதிகம் பேசப்பட்டார் நஸ்ரியா! ஃபேஸ்புக்கில் தினம் தினம் நிறைய ‘லைக்ஸ்’கள் கிடைத்து இந்த சாதனை படைக்க ‘நய்யாண்டி’ படமும் நஸ்ரியாவுக்கு மறைமுகமாக உதவியிருக்கிறது போலும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;