கிருஷ்ணாவுக்கு டும் டும் டும்…!

கிருஷ்ணாவுக்கு டும் டும் டும்…!

செய்திகள் 19-Nov-2013 11:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கற்றது களவு’, ‘அலிபாபா’, ‘கழுகு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் கிருஷ்ணா. பிரபல தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரரும் ஆன கிருஷ்ணா விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அத்துடன், ‘விழித்திரு’, ‘இல்ல ஆனாலும் இருக்கு’, ‘வன்மம்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் கிருஷ்ணாவுக்கும் கோவையைச் சேர்ந்த ரங்கநாதன் - வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்த விழா நாளை (20-11-13) மாலை கோவை ஜெனீஸ் கிளப்பில் நடைபெற உள்ளது. திருமணம் வருகிற ஃபிப்ரவரி 6-ஆம் தேதி கோவையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;