ஏமாற்றினாரா செல்வராகவன்? ‘இரண்டாம் உலகம்’ ரிலீஸாகுமா?

ஏமாற்றினாரா செல்வராகவன்? ‘இரண்டாம் உலகம்’ ரிலீஸாகுமா?

செய்திகள் 19-Nov-2013 10:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்துக்கூட முடித்துவிடலாம். ஆனால், அப்படத்தை நாம் நினைத்த நேரத்தில் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி ரிலீஸ் செய்வது என்பது, கோலிவுட்டைப் பொறுத்தவரை குதிரைக் கொம்புதான்! சமீபகாலத்தில் இதற்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம்.

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா - அனுஷ்கா நடித்திருக்கும் ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து, ஆன்&லைன் புக்கிங்குகளும் தடபுடலாக நடந்து வருகிறது. இந்நிலையில், தங்களுக்கு படம் பண்ணித் தருவதாகக்கூறி இயக்குனர் செல்வராகவன் அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் சந்தோஷி உட்பட சிலர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறியுள்ளனர். தங்களிடம் வாங்கிய பணத்தை செல்வராகவன் திருப்பித் தராவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படம் ரிலீஸ் சமயத்தில் இப்பிரச்சனை ஊதிப் பெரிதாக்கப்படுவதால், குறித்த நேரத்தில் ‘இரண்டாம் உலகம்’ வெளியாகுமா என்பது செல்வராகவனுக்கே வெளிச்சம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;