முப்பதைத் தொட்ட நயன்!

முப்பதைத் தொட்ட நயன்!

செய்திகள் 18-Nov-2013 11:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மீண்டும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறிவிட்ட சந்தோஷத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள். 1984 வருடம் நவம்பர் 18ஆம் தேதி டயானா மரியம் குரியனாக கேரளாவில் பிறந்த இவர், 2003ஆம் வருடம் மலையாளப் படத்தின் மூலம் நயன்தாராவாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

2005ல் ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நயன்தாரா, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முக்கிய ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு தமிழ் ரசிர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார். அதன் பிறகு தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அங்கேயும் தனி கவனத்தைப் பெற்றார்.

சில சொந்தப் பிரச்சனைகளால் சில காலம் தமிழ்சினிமாவில் நடிக்காமல் இருந்த நயன் தற்போது மீண்டும் தமிழில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு இந்த வருடம் அவருடைய நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு படங்களுமே வசூலில் பெரிய சாதனை படைத்ததோடு, நயனின் நடிப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த சந்தோஷம் இனி எப்போதும் தொடர நயன்தாராவிற்கு ‘பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை’த் தெரிவித்துக் கொள்கிறது ‘டாப் 10 சினிமா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;