தனுஷிற்கு ஜோடியாகும் ஸ்ருதியின் தங்கை!

தனுஷிற்கு ஜோடியாகும் ஸ்ருதியின் தங்கை!

செய்திகள் 18-Nov-2013 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விமர்சகர்களிடம் தொடர்ந்து நல்ல பேரை சம்பாதித்தாலும், வசூல் ரீதியாக தனது படங்கள் தமிழில் அடுத்தடுத்து தடுமாறி வருவதால், பெரிய ஹிட் ஒன்றை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘அனேகன்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், மீண்டும் தன் பார்வையை ஹிந்திப் பக்கம் திருப்பி இருக்கிறாராம்.

ஹிந்தியில் அறிமுகப் படமான ‘ரான்ஜ்னா’ வெற்றிப்படமாக அமைந்துவிட்டதால், தற்போது தனுஷைத் தேடி மிகப்பெரிய பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. ‘சீனி கம்’, ‘பா’ போன்ற படங்களில் அமிதாப்பை இயக்கிய ஆர்.பால்கி, அடுத்ததாக தான் இயக்கவிருக்கும் படத்திற்காக தனுஷை அழைத்திருக்கிறாராம்.

அமிதாப்பும், ஷாருக்கும் நடிக்கவிருந்த இப்படத்தில், ஷாருக்கிற்குப் பதிலாக தற்போது தனுஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். ஆர்.பால்கியின் ஃபேவரைட் ஜாம்பவான்களான இளையராஜாவும், பி.சி.ஸ்ரீராமும் இப்படத்திலும் அவருடன் இணைகிறார்கள். அதோடு கமலின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன், இப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார், அதுவும் தனுஷிற்கு ஜோடியாக!

பால்கியின் டைரக்ஷன், அமிதாப்புடன் நடிக்கும் வாய்ப்பு, கமலின் இன்னொரு மகளுடனும் ஜோடியாகவிருக்கும் சந்தோஷம் என ஒரே படத்தில் இப்படி இத்தனை விஷயங்களும் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறாராம் தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;