கௌதம் படத்திற்காக ‘ஜிம்’மிற்குச் செல்லும் அஜித்!

கௌதம் படத்திற்காக ‘ஜிம்’மிற்குச் செல்லும் அஜித்!

செய்திகள் 18-Nov-2013 10:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வரும் பொங்கலுக்கு ‘வீரம்’ படம் ரிலீஸாவது உறுதியாகிவிட்ட நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பதுதான் ‘தல’ ரசிகர்களின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது ‘ட்வீட்’டில் அஜித்துடன் இணையும் படம் குறித்து தெரிவித்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பிற்குச் சென்றுள்ள அவர், தற்போது சிம்பு வைத்து பிஸியாக இயக்கி வருகிறார்.

‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியான பின்னர், சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும் அஜித், பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து கௌதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு, இப்படத்திற்காக இப்போதிலிருந்தே மீண்டும் ‘ஜிம்’மிற்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார் அஜித்.

இப்படத்தில் ‘தல’யின் மாறுபட்ட தோற்றத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள் கௌதம் மேனன் வட்டாரம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;