இசையமைப்பாளரை சமாதானப்படுத்திய தயாரிப்பாளர் ஜி.வி.!

இசையமைப்பாளரை சமாதானப்படுத்திய தயாரிப்பாளர் ஜி.வி.!

செய்திகள் 16-Nov-2013 3:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘ஆடியோ நிறுவனங்கள் இசையமைப்பாளர்களிடம் பத்திரத்தில் எழுதி வாங்கி, இசையமைப்பாளர்களின் இசையும், பாடல்களும் அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்’’ என ‘ராயல்ட்டி உரிமை தங்களுக்கே சொந்தம்’ என்ற கருத்தை ஒட்டுமொத்த இசையமைப்பாளர்கள் சார்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ட்விட்டர் வாயிலாக சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக வெளியிட்டார். அதன் பின்னர், பாடகர்களும் இசையமைப்பாளர்களுடன் கைகோர்த்து, இப்பிரச்சனைக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுத்தார்கள். அதன்பிறகு அந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் பெரிதாக நடந்ததுபோல் தெரியவில்லை.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் ஆடியோ உரிமையை தற்போது சோனி நிறுவனம் வாங்கியிருப்பதாக தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார். ஒரு படத்தை வெளியிடுவதற்கு பொருளாதார ரீதியாக ‘ஆடியோ உரிமையின் விற்பனை’யும் எந்த அளவுக்கு உதவும் என்பதை ஒரு தயாரிப்பாளராக ஜி.வி. புரிந்துகொண்டதின் வெளிப்பாடாகவே அவரின் இந்த முடிவு உணர்த்துகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிகை - டிரைலர்


;