1330 திருக்குறள்களையும் படலாக்கிய பரத்வாஜ்!

1330 திருக்குறள்களையும் படலாக்கிய பரத்வாஜ்!

செய்திகள் 16-Nov-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைப்பாளர் பரத்வாஜ் தற்போது ‘அதிதி’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த நான்கு வருடங்களாக சினிமாவிற்கு இசையமைப்பதை தற்காலிமாக நிறுத்தி வைத்திருந்த பரத்வாஜ், இந்த இடைவெளியை வீணாக்காமல் 1330 திருக்குறளை பாடலாக்கியிருக்கிறார். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளை மூன்று விதமான விதங்களில் இசையமைத்து இருக்கிறாராம்.

இதற்காக உலகம் முழுவதும் உள்ள எல்லா நாட்டு தமிழ் பாடகர்களையும் அழைத்து வந்து பாட வைத்திருக்கிறாராம். வரும் தலைமுறையினருக்கு திருக்குறள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே வார்த்தையால் சொல்வதை இசை மூலம் கொண்டு சொல்ல முயற்சித்திருக்கிறாராம்.

வரும் ஜனவரி 17ஆம் தேதி, திருவள்ளுவர் தினம் அன்று இந்த ஆல்பத்தை வெளியிட இருக்கிறாராம் இசையமைப்பாளர் பரத்வாஜ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அரண்மனை டிரைலர்


;