‘காக்டெயில்’ ரீமேக்கில் நந்தா - அனன்யா

‘காக்டெயில்’ ரீமேக்கில் நந்தா - அனன்யா

செய்திகள் 16-Nov-2013 10:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ‘காக்டெயில்’ என்ற படம் தமிழில் ‘அதிதி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ‘ஸ்பெல் பௌன்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாகிறது. நந்தா, நிகேஷ்ராம் நாயகர்களாக நடிக்க, அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். நா.முத்துகுமார், பா.விஜய் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு பரத்வாஜ் இசை அமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் ஜெய். இம்மாதம் 18 ந் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;