மீண்டும் சங்கராபரணம்!

மீண்டும் சங்கராபரணம்!

செய்திகள் 16-Nov-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுமார் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றத்துடன் தமிழ்நாட்டிலும் அதே பெயரில் தெலுங்கு படமாக வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் ‘சங்கராபரணம்’. பரத நாட்டியத்தையும், இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் கமர்ஷியல் வகையறா எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி, படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அழ வைத்தது. அதுவும் மொழி புரியாதவர்களைகளைக்கூட வெகுவாகக் கவர்ந்தது இப்படம். 35 வருடங்களுக்கு பிறகு சங்கராபரணம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் சினிமாஸ்கோப், டிடிஎஸ் போன்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்பதிற்கேற்றவாறு மாற்றப்பட்டு வரவிருப்பதால் ரசிர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.

சோமையா ஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியவர் கே.விஸ்வநாத். இசைக்கு கே.வி.மகாதேவன், வசனத்திற்கு ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவிற்கு பாலுமகேந்திரா என ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வெகு சிறப்பாகச் செய்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;