’வில்லா’ கதை தொடருமா?

’வில்லா’ கதை தொடருமா?

செய்திகள் 15-Nov-2013 3:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பீட்சா’ அதைத் தொடர்ந்து ‘பீட்சா 2 வில்லா”! ரசிகர்கள், ‘பீட்சா’வை எப்படி ரசித்து, ருசித்து வரவேற்றார்களோ, அது போலவே இப்போது ‘பீட்சா 2 வில்லா’வுக்கும் ரசிர்கர்களிடத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வசூலில் கலக்கிக் கொண்டிருக்கிறது. ‘பீட்சா’ பட கதைக்கும் ‘பீட்சா 2 வில்லா’ பட கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், ‘பீட்சா’வை தொடர்ந்து அதன் சீரீஸாக ‘பீட்சா 2 வில்லா’ வந்தது மாதிரி ‘வில்லா’ படம் தொடருமா? என்ற ஒரு கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

இதற்கு காரணம், ‘வில்லா’வின் கிளைமேக்ஸில் கதை தொடரும் விதமாக முடித்திருப்பது தான்! ‘பீட்சா’ படம் வெற்றி பெற்றது மாதிரி, இப்போது, ‘பீட்சா 2 வில்லா’வும் மாபெரும் வெற்றியை நோக்கி போய் கொண்டிருப்பதால் ‘வில்லா’வின் இரண்டாம் பாகம் வரும் என்றே தோன்றுகிறது! சரி தானா தீபன்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் - டிரைலர்


;