முடிவுக்கு வந்தது ‘புறம்போக்கு’ பிரச்சனை!

முடிவுக்கு வந்தது  ‘புறம்போக்கு’ பிரச்சனை!

செய்திகள் 15-Nov-2013 1:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பேராண்மை’ படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் ‘புறம்போக்கு’. ‘யுடிவி’ நிறுவனமும் ‘பைனரி பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்கள். ஏற்கெனவே இந்தப் படம் சம்பந்தமாக செய்திகள் வெளியாகியிருந்தது. ‘புறம்போக்கு’ தலைப்புக்கு வேறு சிலர் சொந்தம் கொண்டாட, டைட்டில் பிரச்சனை உருவாகியது.

இப்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து ‘புறம்போக்கு’ டைட்டில் எஸ்.பி.ஜனநாதனுக்கு சொந்தமாகி விட, படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதியுடன் நடிக்க இருக்கும் கதாநாயகிகள் மற்றும் படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள் படக்குழுவினர்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;