அமர்க்களமான ஆரம்பம்! களத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித்!

அமர்க்களமான ஆரம்பம்!  களத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித்!

செய்திகள் 15-Nov-2013 11:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே ரஜினியின் ‘கோச்சடையான்’ பட ரிலீஸ் சம்பந்தமான செய்திகள் வெளிவந்து ரசிகர்களை குழப்பிக் கொண்டிருந்த நிலையில், ‘கோச்சடையான்’ எப்போது? என்ற தலைப்பில் நேற்று (14-11-13) நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்ச்சி அடைய வைத்திருக்கும்! டிசம்பர் 12-ஆம் தேதி, சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள்! அன்றயை தினம் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோவை மிகப் பிரம்மாண்டமான விழாவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து படத்தை பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 10-ஆம் தேதியும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ‘இளைய தளபதி’ விஜய்யின் ‘ஜில்லா’, ‘தல’ அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்கள் பொங்கல் விருந்தாக ரிலீசாக இருக்கும் நிலையில், ரஜினியின், ‘கோச்சடையான்’ படமும் ரிலீசாக இருக்கிறது என்ற செய்தி ரசிகர்களை மட்டுமல்லாமல், கோலிவுட்டையே பரபரக்க வைத்திருக்கிறது. ‘ஜில்லா’, ‘வீரம்’ ஆகிய படங்கள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில அந்தப் படங்களின் ஓப்பனிங் வசூல் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே ‘கோச்சடையான்’ படத்தை பொங்கலுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக அதாவது ஜனவரி 10ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

சமீபகாலமாக, பண்டிகை நாட்களில் கூட அதிக படங்கள், பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் அவ்வளவாக வெளிவராத நிலையில் அடுத்த புத்தாண்டு துவக்கத்தில் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, தல ஆகியோரின் படங்கள் வெளியாக இருப்பது சினிமாவை பொறுத்த வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விஷயமாக அமைந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியோடு இன்னொரு மகிழ்ச்சியும் இணைந்து கொள்ளும் விதமாக உலக நாயகன் கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்! ஆக வருகிற புத்தாண்டு துவக்கத்திலேயே தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்கள் நடித்த பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காட போவதோடு, வருகிற புத்தாண்டு தமிழ் சினிமாவுக்கும் நல்ல துவக்கமாக, அமர்க்கள ஆண்டாக அமையப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;