ரஜினியின் “கோச்சடையான்’ எப்போது?

ரஜினியின் “கோச்சடையான்’ எப்போது?

செய்திகள் 14-Nov-2013 1:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எந்திரன்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையைல் ரஜினி நடிப்பில அடுத்து வரவிருக்கும் படம் ‘கோச்சடையான்’. ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள இபடத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, தீபிகா படுகோனே, ஷோபனா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சரத்குமார், நாசர், ஆதி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் ஒரு பாடலும், டீஸ்ரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்க, படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. லேட்டஸ்ட் தகவல்களின் படி, ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்! ஆடியோ வெளியீட்டு விழா முடிந்ததும் படத்தை, பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பினர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு விஜய்யின், ‘ஜில்லா’, அஜித்தின் ’வீரம்’ ஆகிய படங்களும் ரிலீசாக இருப்பதால் இந்த பொங்கலை பொறுத்தவரையில் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;