’டாஸ்மாக்’ காட்சிகள்… நடிகைகள் ஆவேசம்!

’டாஸ்மாக்’ காட்சிகள்… நடிகைகள் ஆவேசம்!

செய்திகள் 14-Nov-2013 11:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நேற்று சென்னையில், ‘மெய்யழகி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகை தேவயானி பேசும்போது, ‘‘இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வருவது குறைந்து விட்டது. ‘மெய்யழகி’ நல்ல கதையம்சம் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்! மச்சி, மச்சான் என்று வசனம் பேசுகிறார்கள்! குடிக்காரர்கள் ஆட்டம் போடும் ‘டாஸ்மாக்’ காட்சிகளும் நிறைய இடம் பெறுகின்றன. இது சமூகத்துக்கு நல்ல விஷயமாக தோணவில்லை.

சின்னப் படம், பெரிய படம் என்று வேறுபாடு பார்க்கக் கூடாது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களே பெரிய படங்கள்’’ என்றார். இதைத் தொடர்ந்து பேசிய நடிகை சோனாவும், படத்தில் இடம்பெறும் ‘டாஸ்மாக்’ காட்சிகள் குறித்து பேசினார். ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இடம் பெறுகிறது. அது மாதிரி ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு’’ நிறைய படங்களில் டாஸ்மாக் காட்சிகளை வைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம் இல்லை’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;