அஜித்துடன் நடிக்க பயமாக இருந்தது!

அஜித்துடன் நடிக்க பயமாக இருந்தது!

செய்திகள் 14-Nov-2013 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஆராம்பம்'. இப்படத்தில் மத்திய மந்திரி மகளாக நடித்தவர் அக்‌ஷரா. கெத்தாகா, ஒய்யாரா நடை நடந்த படி அஜித்தின் கண்ணாடியை கழற்ற சொல்லும் காட்சியில் வந்தாரே அவர் தான்! ’ஆரம்பம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘ நான் அஜித் சாருடைய தீவிர ரசிகை . அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள் . அந்த தருணம் ‘ஆரம்பம்’ படத்தில் அமைந்தது. அஜித் சாருடைய ரசிகர்கள் பலம் திரை அரங்கில் அந்த காட்சியை பார்த்தபோது தெரிந்து கொண்டேன் . உண்மையை சொல்லணும்னா முதலில் அஜித் சாருடன் நடிக்க பயமாக இருந்தது. அதை புரிந்துகொண்ட அஜித் சார் எனக்கு தைரியமூட்டினார்.

எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதற்கு காரணம் அவர்தான். அவர் மிகச் சிறந்த ஒரு மனிதர் என்பதை அவருடன் பழகிய நாட்களில் புரிந்து கொண்டேன் . ‘ஆரம்பம்’ படத்தின் ஒர்க் பண்ண நாட்களை நான் என்றும் நினைவில் வைத்துக் கொள்வேன்

நான் ஒரு பரத கலைஞர் . சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு . ‘ நாடோடிகள்’ படத்தின் ஹிந்தி ரீ-மேக் ஆன ‘Rangrezz’ படத்தில் நடித்துள்ளேன் . எனக்கு ஹாலிவுட் நடிகர் பிராட்லி கூப்பரை ரொம்பவும் பிடிக்கும். பிடித்த பாலிவுட் நடிகை கரீனா கபூர். அவருடைய மெல்லிய இடைவாகும் அவர் தன்னை கட்டு கோப்பாய் வைத்து இருக்கும் அழகையும் நான் எப்போதுமே ரசிப்பேன் .

விளையாட்டு துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு . நான் தேசிய அளவில் கை பந்து போட்டியில் கலந்து கொண்டவள். எனக்கு மன உறுதியும் திடமும் அதிகம் . அந்த உறுதியோடு தமிழ் திரை உலகில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடிப்பேன் ’' என்கிறார் அக்க்ஷர!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;