விஷால் தயாரிப்பில் விக்ராந்த்!

விஷால் தயாரிப்பில் விக்ராந்த்!

செய்திகள் 14-Nov-2013 10:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'பாண்டியநாடு' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பாரதிராஜா, ‘வேந்தர் மூவிஸ்’ டி.சிவா, இயக்குனர் சுசீந்திரன், விஷால், விக்ராந்த், லக்ஷ்மி மேனன் உட்பட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் சந்தோஷமாகவும், வெளிப்படையாகவும் பேசினார்.

”இந்த வெற்றி கிடைக்க எனக்கு 6 வருடங்கள் ஆகியது. நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை விட எனது அப்பா, அம்மா ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவங்க, ஒவ்வொரு படத்தின்போதும் வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். இந்தப் படத்தை வெற்றிபெற செய்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில நடித்த எல்லோருக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. விக்ராந்துக்கும் நல்ல பெயர்! விக்ராந்த் சந்தோஷ ப்படுவதை விட நான் சந்தோஷ படுகிறேன். விரைவில் எனது தயாரிப்பில் என் தம்பி விக்ராந்தை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன். அந்தப் படம் அவர் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமையும். நான் நடிக்க வந்தது கால சூழ்நிலை! அதேபோல தயாரிப்பில் இறங்கியதும் சூழ்நிலையால் தான். முதன் முதலாக தயாரித்த படம் வெற்றி பெற்றிருப்பதால ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்'’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;