டிசம்பரில் பிரியாணி!

டிசம்பரில் பிரியாணி!

செய்திகள் 13-Nov-2013 3:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அழகுராஜா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘பிரியாணி’. ‘மங்காத்தா’வின் சக்சஸுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்தப் பத்தில் கார்த்தியுடன் ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவன தயாரிப்பு, வெங்கட் பிரபு - கார்த்தி இணைந்த முதல் படம், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நூறாவது படம் என பல சிறப்புக்கள் உள்ள இந்தப் படத்தை பொங்கலை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் இப்போது அதற்கு முன்னதாகவே, டிசம்பர் மாதம் ‘பிரியாணி’யை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்! ஆக, இந்த செய்தி ‘பிரியாணி’யை ருசிக்க பொங்கல் வரை காத்திருக்க வேண்டுமே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;