உறுதியானது விஜய் – முருகதாஸ் கூட்டணி!

உறுதியானது விஜய் – முருகதாஸ் கூட்டணி!

செய்திகள் 13-Nov-2013 3:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த வருடம் 'கலைப்புலி' தாணு தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்றபடம் ‘துப்பாக்கி’. இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது என்றும் அதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்றும் கூறப்பட்டு வந்தது. இப்போது அந்த புராஜெக்ட் உறுதியாகி விட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தை ‘ஐங்கரன் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்க, பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். விஜய் இப்போது நடித்து வரும் ‘ஜில்லா’ படம் வெளியானதும் இதன் படப்பிடிப்பு தொடங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - டிரைலர்


;