‘அதுவேற இதுவேற’ படத்துக்கு பாராட்டு!

‘அதுவேற இதுவேற’ படத்துக்கு பாராட்டு!

செய்திகள் 13-Nov-2013 12:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

களிகை ஜி ஜெயசீலன் வழங்க, ‘ஜெனி பவர்ஃபுல் மீடியா’ நிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரித்திருக்கும் படம், ‘அதுவேற இதுவேற’. இந்தப் படத்திஅல் வர்ஷன், சானியா தாரா கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்க, இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எம். திலகராஜன். ”சென்னைக்கு எவ்வளவோ பேர் என்னன்னவோ ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வருவார்கள. ஆனால் தாதாவாக வேண்டும் என்று வரும் ஒருவனது காமெடி கதைதான் இந்தப் படம்.

இந்தப் படத்தை ரசித்து பார்த்த தணிக்கை குழுவினர் ‘நல்ல படம்’ என்று கூறி தணிக்கை சான்றிதழ் கொடுத்தார்கள். இதுவே இந்தப் படத்துக்குக் கிடைத்த பெரிய பாராட்டு’’ என்கிறார் இயக்குனர் திலகராஜன். இந்தப் படத்திற்கு ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசை அமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாண்டியோட கலாட்டா தாங்கல - டிரைலர்


;