இறந்தவர் வாழும் கதை!

இறந்தவர் வாழும் கதை!

செய்திகள் 13-Nov-2013 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கிட்டத்தட்ட பதினைந்து படங்களை இயக்கியவரும், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருப்பவர் பாலு ஆனந்த். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’. பெங்களூரில் போலீஸ் ஆவணங்களில் மற்றும் பத்திரிகைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ஒருவன் தமிழ்நாட்டில் உயிருடன் வாழ்கிறான்.

அவன் எப்படி இறந்தான்? எப்படி வாழ்கிறான்? என்பதை காமெடியாக சொல்லும் படமாம் இது. இதில் சத்யா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக உதாஷா நடிக்கிறார். ‘சிபிசாம் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபி சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரடி டேவிட் ஒளிப்பதிவு செய்ய, சபேஷ் முரளி இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;