படத்தின் பில்லர்ஸ் ஆர்யா, அனுஷ்கா!

படத்தின் பில்லர்ஸ் ஆர்யா, அனுஷ்கா!

செய்திகள் 13-Nov-2013 12:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பி.வி.பி சினிமாஸ்’ தயாரிப்பில் ஆர்யா, அனுஷ்கா நடிக்க, செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'இரண்டாம் உலகம்'. வருகிற 22 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது இயக்குனர் செல்வராகவன் பேசும்போது,

”இரண்டாம் உலகம்' என்ற உடனே இன்னொரு பிளானெட்-ன்னு நினைச்சுடாதீங்க. முழுக்க முழுக்க கற்பனையான ஒரு ஃபேன்டசி படம். 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி வரலாற்று படம் இல்லை. முதல்ல இந்த சப்ஜெக்ட்டை சில தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது ஸ்கிரிப்ட்டில் உள்ளதை அப்படியே எடுப்பது கஷ்டம்ன்னு சொல்லிட்டாங்க!. ‘ பி.வி.பி. சினிமாஸ்’ கதையை புரிஞ்சுக்கிட்டு இந்த படத்தை எடுக்க ரொம்பவும் சப்போர்ட் தந்தாங்க. ஆர்யாவும், அனுஷ்காவும் இந்தப் படத்தோட பில்லர் மாதிரி! இந்த முயற்சியெல்லாம் ரசிகர்களை திருப்தி பண்றதுக்கு தான்’’என்றார்.

அதனைத் தொடர்ந்து ஆர்யா பேசும்போது, “' செல்வராகவன் ஸ்கிரிப்ட்டை சொல்லும்போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. இதை எப்படி ஃபிலிம்ல லோடு பண்ணப் போறாங்கன்னு? இதுல ஒரு நடிகரா இருக்கிறதை விட, ஒரு ஆடியன்ஸா ரொம்ப த்ரில்லா இருக்கு. விஷுவலா இந்தப் படம் ஒரு ட்ரீட்டா இருக்கும். லவ் ஸ்டோரி, பெரிய பட்ஜெட்டுல உருவாகியிருக்கிற படம்’’ என்ற ஆர்யாவிடம், “உங்களுக்குப் பிடித்த ஹீரோயின் யாரு?’’ன்னு கேட்டபோது , ‘‘எனக்கு நயன்தாராவை ரொம்பப் பிடிக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;