'மதகஜராஜா' வெற்றிபடமாக அமையும்!

 'மதகஜராஜா' வெற்றிபடமாக அமையும்!

செய்திகள் 13-Nov-2013 11:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'பாண்டியநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு ஊராக சென்று நன்றி தெரிவித்து வருகிறார் விஷால். பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவர் வேலூரில் ரசிகர்கள் மத்தியில் பேசியபோது,

”நான் நடித்திருக்கும் ‘பாண்டியநாடு’ படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் கூடுதலாக 72 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. என் திரை உலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இதைக் கருதுகிறேன். இந்தப் படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்கள், பார்வையாளர்கள் டைரக்டர் சுசீந்திரன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘பாண்டியநாடு’ திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களுக்கும் சென்று வர ஆசைப்படுகிறேன்.

அடுத்து கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறேன். எனது அடுத்த படம் 'நான் சிவப்பு மனிதன்'. ‘மதகஜராஜா’ படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் செய்ய முயற்சி எடுப்பேன். 'மதகஜராஜா'வும் வெற்றிப் படமாக அமையும்' என்றார் விஷால்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;