விபத்தில் சிக்கினார் நஸ்ரியா!

விபத்தில் சிக்கினார் நஸ்ரியா!

செய்திகள் 12-Nov-2013 10:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'காதலில் சொதப்புவது எப்படி' படப்புகழ் பாலாஜி மோகன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடிக்கும் படம் 'வாய் மூடி பேசவும்'. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மூணாறு பகுதியில் நடந்து வந்தது. நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் பாலாஜி மோகன் படம்பிடித்து கொண்டிருந்தார்.

கதைப்படி நஸ்ரியா, டூவீலரில் வேகமாக வந்து திரும்புவது மாதிரியான காட்சியில் எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்தார். சறுக்கி விழுந்ததில் நஸ்ரியாவிற்கு சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால் படக்குழுவினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆந்திரா மெஸ் - டிரைலர்


;