அடுத்த படத்தில் தமிழ் இருக்கும்! - ரித்திக் ரோஷன்

அடுத்த படத்தில் தமிழ் இருக்கும்! - ரித்திக் ரோஷன்

செய்திகள் 11-Nov-2013 5:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குனருமான ராகேஷ் ரோஷன் இயக்கி, தயாரித்திருக்கும் படம் 'க்ரிஷ் 3'. ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, நடித்த இப்படம் தீபாவளியன்று வெளியானது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நடிகர் ரித்திக் ரோஷனும் அவரது தந்தை ராகேஷ் ரோஷனும் சென்னை வந்தனர். சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிக உற்சாகமாக கலந்து கொண்டனர். இவர்களுடன் ஒளிப்பதிவாளர் திரு மற்றும் வினியோகஸ்தர் சுபுவும் இருந்தனர்.

”ஷாருக்கான் மாதிரி நீங்களும் தமிழ், தமிழ்நாடு சம்பந்தபட்ட விஷ்யங்களை உங்கள் படத்தில் பயன் படுத்துவீர்களா?’’ என்று ரித்திக் ரோஷனிடம் கேட்டபோது,

" எனது அடுத்தப் படத்தில் நிச்சயமாக பயன்படுத்துவேன். உங்களுடைய அன்பு எனக்கு தெரியும். நான் வரும் ஒவ்வொரு முறையும் நீங்கள் கொடுக்கும் வரவேற்பு, அன்பு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்நாட்டில் ‘க்ரிஷ் 3’ படத்தை வெளியிட்ட அடுத்த வாரத்திலேயே 60 சதவிகிதம் தியேட்டர்களை அதிகரிக்க செய்தது இங்கேதான்" என்றார்.

ரித்திக் ரோஷன் வரவை ஒட்டி சத்யம் தியேட்டர் முன்பு பெரும் திரளான கூட்டம் கூடியது. ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர் பாதுகாவலர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேங் பேங் - டிரைலர்


;