ஒரு காட்சிக்காக ஹெலி கேம்!

ஒரு காட்சிக்காக ஹெலி கேம்!

செய்திகள் 11-Nov-2013 3:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனமும், 'யுடிவி' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் 'இவன் வேற மாதிரி'. விக்ரம் பிரபு, சுரபி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனர் சரவணன் கூறும் போது, "ஆக்‌ஷன் லவ் ஸ்டோரியான இப்படம் திரைக்கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம். இயக்குனர் லிங்குசாமி இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருப்பதால் ஒரு இயக்குனரின் மன நிலையை புரிந்து கொள்கிறார்'. முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த, ’எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியபோது, அவர் ஒரு நாள் மட்டுமே படபிடிப்புக்கு வந்தார்.

ஆனால் லிங்குசாமி ஒரு நாள் கூட வரவில்லை. சுதந்திரமாக படமெடுத்து முடித்துள்ளேன். படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு, ‘ஹெலி கேம்’ தேவைப் பட்டது. அதுவும் பாங்காங்கில் இருந்து தான் கொண்டு வரணும்.

அந்த காட்சியின் அவசியத்தை புரிந்து கொண்டு ஏற்பாடு செய்து கொடுத்தார் லிங்குசாமி சார். படம் எதிர்பார்த்த படி நன்றாக வந்திருக்கிறது’’ என்றார்.

படம் குறித்து, 'யுடிவி' தனஞ்செயன் கூறும்போது, 'கும்கி' டிசம்பர் மாத இறுதியில் வந்து அந்த வருடத்தின் சிறந்த படமாக வெற்றிபெற்றது. அதைப் போலவே இந்தப் படமும் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படமும் நிச்சயம் வெற்றி பெறும். இப்படம், இயக்குனர் சரவணனுக்கும், விக்ரம் பிரபுவுக்கும் தொடர் வெற்றியாக அமையும்'’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;