‘லைஃப் ஆஃப் பை’ போல ஒரு தமிழ் படம்!

 ‘லைஃப் ஆஃப் பை’ போல ஒரு தமிழ் படம்!

செய்திகள் 11-Nov-2013 3:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'நியு எம்பயர் செல்லுலாய்ட்ஸ்' நிறுவனம் சார்பில் லஷ்மிகாந்த் தயாரித்துள்ள படம் 'ராவண தேசம்'. இந்தப் படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாக நடித்திருப்பவர் புதுமுகம் அஜெய் நூத்தகி. கதாநாயகியாக ஜெனிபர் நடித்துள்ள இப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் பற்றி அஜெய் நூத்தகி கூறும்போது,

“இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் உயிர் பிழைக்க தப்பிக்கும் அப்பாவி கும்பலின் உணர்ச்சி போராட்டமே 'ராவண தேசம்'. கடல் வழியாக உயிரைக் காபாற்றி கொள்ள நடக்கும் போராட்டம் படம் பார்ப்பவர்களின் மனதில் நிற்கும். காதல், எமோஷன், ஆக்‌ஷன் என எல்லா அம்சங்களும் இருக்கும். நிஜ சம்பவத்தை படமாக்கியுள்ளோம். 'லைஃப் ஆஃப் பை' திரைப்படம் எப்படி ஒரு உணர்வு பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே பாதிப்பை தரும் படமாக 'ராவண தேசம்' இருக்கும். மிகுந்த போராட்டங்களுக்கு நடுவே கடலிலேயே அதிக காட்சிகளை படமாக்கியுள்ளோம்’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;