பாலாவை அழ வைத்த மிஷ்கின்!

பாலாவை அழ வைத்த மிஷ்கின்!

செய்திகள் 11-Nov-2013 1:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தொலைக்காட்சி, பத்திரிகை உள்ளிட்ட மீடியாக்களில் அதிகம் தலைக் காட்டாதவர் இயக்குனர் பாலா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று தனியார் தொலைக் காட்சியில் நடிகை சங்கீதாவின் கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதில் சொன்னார். சாமர்த்தியமாக கேள்விகளை கேட்டு பதில்களை வாங்கினார் சங்கீதா. அந்த பேட்டியில் இடம் பெற்ற ஒரு சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே..

'நான் கடவுள்' படம் ஆரம்பிக்கும்போது உங்களுக்கும் அஜித்துக்கும் என்ன பிரச்சனை? நீங்க அஜித்தை ரூமுக்குள் வைத்து அடித்ததாக சொல்கிறார்களே?

" நான் அடிச்சேன், மிதிச்சேன்னு சொல்றதெல்லாம் பத்திரிகைகளின் கற்பனை! மேலே தெரிஞ்சுக்கணும்னா.. நீங்க அல்ட்டிமேட்டுக்கிட தான் கேட்டுக்கணும்'. ஆனால் எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை.

உங்க கழுத்தில நிறைய மாலை இருக்கு. அதுல ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருக்கே! அது என்ன? யார் கொடுத்தது?

(கழுத்திலிருந்து மாலையை வெளியே எடுத்தப்படியே…) 'இது அகோரி (பிணம் தின்பவர்கள்) கொடுத்தது. தினமும் ஒரு மனித பிணத்தை தின்பவர்கள். 108 மனிதர்களின் முதுகெலும்புகள், வெவ்வேறு மனிதர்களுடைய முதுகெலும்பின், ஒவ்வொரு துண்டுகளை கொண்டு மண்டை ஓடு வடிவில் செய்யப்பட்டுள்ளது! (இதை கேட்ட பார்வையாளர்களுக்கு நிச்சயம் கிலி பிடித்திருக்கும்).

சமீபத்தில் நீங்கள் பார்த்து அழுத படம் எது?

மிஷ்கின் இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பார்த்து அழுதேன். மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு ஒரு வரம்.

இப்படி பாலாவின் பேட்டி சுவாரஸ்யமாக சென்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;