சபாஷ் சரியான போட்டி!

சபாஷ் சரியான போட்டி!

செய்திகள் 11-Nov-2013 10:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தின் சரித்திர நாயகன் குஞ்சாலி மரைக்கார்! இவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக இயக்க இருக்கிறார் பிரபல இயக்குனர் ப்ரியதர்சன் எனபதும், இந்த சரித்திர கதையில் மோகன்லால் குஞ்சாலி மரைக்கார் ஆக நடிக்க இருக்கிறார் என்பதும் முடிவான விஷயம்! இன்னும் இந்தப் படத்தின் முதற்கட்ட வேலைகளே துவங்காத நிலையில் இப்படத்தில் மோகன்லாலுடன் மம்முட்டி, சூர்யா, பாலிவுட் ஹீரோயின் கரீனா கபூர் முதலானோர் நடிக்கிறார்கள் என்றும், இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில், 3டி-யில் உருவாக இருக்கிறது என்றும் சில மலையாளம் மற்றும் தமிழ் மீடியாக்களில் செய்திகள் வந்திருப்பதை அறிந்த இயக்குனர் ப்ரியதர்சன், அந்த செய்திகளை மறுத்துள்ளார். இதுக் குறித்து அவர் கூறும்போது,

“குஞ்சாலி மரைக்கார் சரித்திர கதையை படமாக்க இருக்கிறேன் என்பதும், இதில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்பதும் முடிவான விஷயம் தான்!. ஆனால் இந்தப் படம் சம்பந்தமாக மீடியாக்களில் இப்போது வந்து கொண்டிருக்கும் செய்திகள் தவறானது. படத்தின் ஆரம்ப வேலைகளே இன்னும் ஆரம்பிக்காத நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வருவது வருத்தம் அளிக்கிறது. ஒரு சரித்திர கதையை படமாக்க வேண்டும் என்றால் ஸ்கிரிப்ட் வேலைகள், ஆராய்ச்சிகள் என நிறைய விஷயங்களை கவனமாக செய்ய வேண்டி உள்ளது. இதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. ‘குஞ்சாலி மரைக்கார்’ பட வேலைகளை அடுத்த ஆகஸ்ட் மாதம் தான் துவங்குவேன். அதற்கு முன் நான் இப்போது இயக்கி விரைவில் ரிலீசாகவிருக்கும், ‘கீதாஞ்சலி’ படத்தின் வேலைகளை முடிக்க வேண்டி உள்ளது. இந்தப் படம் ரிலீசானதும் இன்னொரு படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இதெல்லாம் முடிந்த பிறகு தான் ‘குஞ்சாலி மரைக்கார்’ படத்தின் வேலைகளில் இறங்குவேன்’’ என்று கூறியிருக்கிறார்.

இது இப்படி இருக்க, ‘குஞ்சாலி மரைக்கார்’ கதையை, மலையாளத்தில் நிறைய ஹிட் படங்களை இயக்கிய அன்வர் ரஷீத் என்பவரும் இயக்கத் திட்டமிட்டு, அதன் வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் என்பதும், இதில் குஞ்சாலி மரைக்கார் கேரக்டரில் நடிக்க மம்முட்டி கமிட் ஆகியிருக்கிறார் என்பதும், இந்தப் படமும் பெரிய பட்ஜெட்டில், 3-டியில் உருவாக இருக்கிறது என்பதும் இப்போது மோலிவுட்டில் பரபரத்துக் கொண்டிருக்கும் செய்தி ஆகும்! ‘குஞ்சாலி மரைக்கார்’ கதையை முதலில் படம் பிடிப்பது ப்ரியதர்சனா, இல்லை அன்வர் ரஷீதா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்! ஆக, சபாஷ் சரியான போட்டி தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;